செல்வமணி - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : செல்வமணி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 31-Jul-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 11714 |
புள்ளி | : 8622 |
மனமென்ற ஒன்று மசமச வென யோசிக்கும்,
கண்ணில் பட்டவரையெல்லாம் புடம் போடும்
யாராவது இருவர் பேசிக்கொண்டிருந்தால்
ஓ இது அதுவாவென தீர்மானிக்கும்.
ஸ்கூல் பசங்களாய் இருந்தால் ஏண்டா வென எகத்தாளமிடும்
வாலிப வயசென்றால் எதுல போய் முடியுமோவென எக்காளமிடும்
பெருசுகளாய் இருந்தால் போதும் ம்.ம். என ஏக்கப்பெருமூச்சிடும்
மொத்தத்தில் தனக்கில்லைஎனில் தர்க்கசிந்தனையில் மூழ்கி....!
காதல் இல்லை என்று சொன்னால் அவஸ்தை கூட ஆரோக்கியமில்லை.
எஜமானனை தெறிவு செய்ய
எத்தனிக்கும் அறிவியல்,
எக்குத்தப்பாய் எப்படியோ
ஏடாகூடமாகும் அரசியல்.
ஆனை மேலே ஆனை மாதிரி
அம்பானை போகுது பார்
அறிவு இருந்தும் இல்லாதது போல
அட்டகாசம் பண்ணுது பார்.
திருவிழா மாதிரி தெருவெங்கும்
ஓடுது பார் கூட்டம் எல்லாம்
ஓசிக்கும் காசுக்கும் கூடுற கூட்டம்
ரெண்டு கட்சி கூட்டத்திலயும் அவங்களே மாறி மாறி.
காண்ட்ராக்ட் ல கூட்டிட்டு வந்து கொண்டு போக
தினமும் ரேட் பேசி கூட்டுற கூட்டமெல்லாம்
ஓட்டா மாறுமா, மாறாது.
குடும்பத்துக்குள்ள கூட எவ்வளவு குடுத்தாங்கன்னு
பேசிட்டு இவன் அவன் இவ்வளவு தானான்னு
ஏசினாலும் பேசினாலும் பாதிக்கும் மேலே
பாதிக்காம தான் போடுவாங்க.
மூஞ்சிய பாரு மொகறகட்டையன்னு
திட்டிட்டு கடந்து போனவளே,
என் முகத்துக்கென்ன குறைச்சல்ன்னு
நானும் நினைச்சுக்குறேனே
யாருமே யாரையுமே பார்க்காம
இருக்க முடியாதே இங்கே
உன்னை நான் சும்மா தானே
பாத்தேன் எதுவுமே சொல்லலையே
ஆனாலும் என்னமோ பண்ணுதே எனக்குள்ளே
உன்னை இனிமே பாக்காம இருக்க முடியாதே
எதாச்சும் பண்ண தோணுதே
என்ன பண்ணலாம் நீயே சொல்லிட்டு போ
இம்சிக்காம எந்த தொந்தாவும் பண்ணாம
உன்னையே நானினி நினைச்சுட்டே இருப்பேனே
என்னை சீண்டிப்போன சிங்காரமே செல்லமே
ஐ லவ் யூடி, ஆனந்தமடி இனி உன் நெனைப்பே.!
உரசல் ஓரங்கமானால் தேடல்
அந்த உரசல் விரிசலானால் ஊடல்.
உணர்வு சங்கமங்களின் ஓடுபாதை
இரு மனங்களின் ஈர்ப்பு தண்டவாளம்.
குறுக்கு நெடுக்கு கோலங்களின்
அசைவும் இசைவுமே ஆனந்த சங்கல்பம்.
ஊசிக்கு உடன்படா நூலுக்குள்
யோசிக்கும் பேதமே ஊடல்.
உன்னில் நான் என்னில் நீ என்றால் ஊடலில்லை
உனக்கா எனக்கா என்ற வேள்வியில் தேடலில்லை
உணர்ச்சிகள் மரித்துப்போனபின்
நீயுமில்லை நானுமில்லை – அந்த ஊடலில்
தேகப்பந்தில் காற்றில்லை கரிசனமுண்டு
கவலையுண்டு கண்ணீருண்டு
கோபம் பிரளயமானால் கொதிப்பதுண்டு
விட்டுக்கொடுத்தால் இணைப்புண்டு
அணைப்புண்டு அடங்குவதுண்டு
கிளர்ச்சியின்றி மலர்ச்சியுண்டு
மயங்குவதுண்டு மலர்தேன் சுரப்
ஒருநாள் யமுனை நதி தீரத்தில் பரமாத்மா குடிசை போட்டுக் கொண்டு ருக்மணியுடன் இருக்கிறான். பிசுபிசுவென்று மழைத் தூறல். குளிர்காற்று அடிக்கிறது.பரமாத்மா தூங்கவேயில்லை. ருக்மணி பிராட்டி பரமாத்மாவின் பாதத்தைப் பிடித்து தூங்கப் பண்ண வந்தாள். எவ்வளவு நேரம் ஆகியும் பரமாத்மா தூங்கவேயில்லை.ஏன் நித்திரை கொள்ளவில்லை என்று கேட்டாள் ருக்மணி.
யமுனையின் அக்கரையில் என்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட ராதிகா இருக்கிறாள். அவள் தூங்கவில்லை; அதனால் நான் தூங்கவில்லை என்றான் பரமாத்மா.
அவள் ஏன் தூங்கவில்லை என்று கேட்டாள் ருக்மணி பிராட்டி.
அவள் நித்யம் இரண்டு படி பாலைச் சுண்டக் காய்ச்சி பரிமள திரவியங்கள் எல்லாம் போட
சருமத்தின் நிறம் அடர் பழுப்பிலிருந்து மிதமான இளஞ்சிவப்பு-வெள்ளை நிறங்கள் வரை பலவிதங்களில் உள்ளன.நிறங்களில் வேறுபாடு உள்ளதற்கான காரணம் இயற்கைத் தேர்வே
பலர் சருமத்தின் நிறத்தில் பைத்தியமாக இருப்பார்கள். சருமத்தினை வெள்ளை நிறமாக மாற்ற மற்றும் பராமரிக்க தீவிரமாக முயற்சிப்பார்கள்.தினமும் ஊடகங்களில் சருமத்தை வெண்மை நிறமாக மாற்ற கிரீம்,லோசன்,சன் ஸ்கிரீன் மற்றும் விஞ்ஞான பூர்வமற்ற பொருட்கள் ஆகியவற்றை விளம்பரப் படுத்துகின்றனர்.
சருமத்தின் நிறம் அதன் உயிரியல் மற்றும் பரிணாமங்கள் காரணமாக பழுப்பு, கருப்பு நிறமாகக் காணப்படுகிறது.மருத்துவ முறையில் வெள்ளை நிறத்தை விட அடர்ந்த(கருப்பு) நிறமே சிறந்தது எ
ராமர் பாலம் என்ற பெயரில் சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து பரிவாரம் நமக்கு ஏற்படுத்திய நட்டம் என்ன?
உலகின் தொழிற்சாலை நாடுகளான சீனா, கொரியா, தைவான், ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா ஆகியவை தென்கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன
தொழிற்சாலைகளை நடத்த தேவைப்படும் பெற்றோலிய பொருட்களை விற்கும் அரபு நாடுகள் மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கின்றன
பொருட்களை விற்கும் சந்தை நாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன, இந்த மூன்றையும் இணைக்கும் கடல் பாதையாக இந்திய பெருங்கடல் இருக்கிறது, இலங்கை ஒரு முக்கியமான Transit பாய்ன்ட் என்று சொல்லகூடிய கப்பல்களை நிரப்பும் பொருள் மாற்றும் இடமாக இருக்கிறது.
மக்கள் வளமும், கல்வி
எதை செய்தாலும்
நல்லதோ கெட்டதோ
அதைப்பற்றி
மோசமாகத்தான்
பேசுவார்கள்,
கண், காது, மூக்கு - எல்லாம்
நல்லது கெட்டது என்பதை
சாதாரணமாகவே
எடுத்துக்கொள்ளும்,
வாய் மட்டுமென்ன
வாய்தாவா வாங்கும்?
நல்லது நடக்காமல் போனால்
அது தான் தெரிஞ்சதாச்சே
என அலட்டிக்கொள்ளும்.
ஒரு வேளை நல்லதே நடந்து விட்டால்
அட, பரவாயில்லையே
என அலுத்துக்கொள்ளும்.
அது சரி ஏன் இப்படி என்று
எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்?
நாம் எப்போது அப்படி இருந்தோம்
இப்போது மட்டும் மாறி இருப்பதற்கு,
என எகத்தாளம் தான் பதிலானது.
மனுஷப்பயலுகளுக்கு தாங்க
இந்த குரங்குத்தனம்..
இன்னுமா புரியல..
அப்படின்னா
நீங்க தெய்வம் சார்..
தனலட்சுமியின் ஆசை
ஆடைகள்
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
காலணிகள்
பாதி விலையில்
இனிப்புகள்
குறைந்த விலையில்
எப்படியாவது
இந்த முறையாவது
குழந்தைக்கு வாங்கி
கொடுத்துவிட வேண்டும்
மனதில் நினைத்தபடி
கடை விளம்பரங்களை
கடந்து சென்றாள்
தினக் கூலிக்கு செல்லும்
தனலட்சுமி
கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 1
கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 2
குஞ்சு பொரித்து கூட்டிலிருந்து
துரத்தி விடும் தாய்ப்பறவை,
தனியே பறக்கும் திராணிக்கு
தயார் செய்திட, அது ஒரு தந்திரம்.
இந்த மந்திரம் அறியா மானுடன்
பிள்ளையை பிரிவதில்லை பெரியதாகும் வரை.
அளவை மீறும் அன்புக்கும் அணை வேண்டும்;
ஆற்றல் அறிவு கொஞ்சலில் கெஞ்சலில் வாராது.
மூளை மந்திரம் தந்திரம் கொண்ட ஒரு எந்திரம்
இயக்குவது இயங்குவது சக்தியெனும் யுக்தி கொண்ட புத்தி
அப்பாவி சக்தியறியான், அறிவாளி புத்தியுடையான்
ஆன்றோன் சான்றோன் இரண்டையும் யுக்தியாக்குவான்
வாய் மட்டும் இல்லையெனில் நாய் கூட நம்மை கவ்வி விடும்
வாழ்முறை நெறி அறியாதவன் வாழவே தகுதி யற்றவன்
உதிக்கும் சூரியனுக்கும் எரி வெயிலுக